திங்கள், 28 செப்டம்பர் 2026 பாரிஸ் 06:06
ON AIR நமது FM
காலை வணக்கம் பாரிஸ்
06:00 – 09:00
அட்டவணை
Live Radio Broadcast from France
பிரான்ஸ் வானிலை
—°C
பாரிஸ்
ஏற்றப்படுகிறது…
லா கூர்நெவ் —°
செர்ஜி —°
லியோன் —°
ஃபிளாஷ்
பிரதான செய்திகள்

இலையுதிர் காலத்தில் கோடை போன்ற வெப்பம்!!

இலையுதிர் காலம் தொடங்கியுள்ள நிலையிலும் கோடைக்காலத்தைப் போன்ற வெப்பமான வானிலை தொடர்ந்து வருகிறது. அடுத்த வார தொடக்கத்திலும் இந்த நிலை நீடிக்கும் என Météo France தெரிவித்துள்ளது. குறிப்பாக திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மழைக்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் நிலையில், நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 25°C-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை நாட்டின் தெற்குப் பகுதியில் 25 முதல் 28°C வரை வெப்பநிலை பதிவாகலாம் என்றும், Vichy நகரில் 31°C வரை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வார தொடக்கத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கக்கூடும் என Météo France எச்சரித்துள்ளது. செப்டம்பர் 29ஆம் திகதி, செப்டம்பர் மாத இறுதிக்கு வழக்கத்தை விட மிகவும் வெப்பமான நாளாக அமையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. La Chaîne Météo இதனை ‘வெப்ப உச்சம்’ என குறிப்பிட்டுள்ளது. திங்கட்கிழமை Allier மற்றும் Yonne பகுதிகளில் 29°C வரையும், Bordeaux மற்றும் Bourges நகரங்களில் 28°C வரையும் வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை Bretagne முதல் Normandie வரையிலான பகுதிகளில் மழையும், Atlantic கடற்கரையில் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும். செவ்வாய்க்கிழமை அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும், நாட்டின் சராசரி தினசரி வெப்பநிலை 22°C ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது பருவகால சராசரியை விட சுமார் 6°C அதிகமாகும். பின்னர் புதன்கிழமை முதல் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு, மழை அதிகரிக்கக்கூடும். 

குறிப்பாக ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி வியாழக்கிழமை நாடு முழுவதும் மழை பெய்யக்கூடும் என்றும், தென்கிழக்குப் பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் Météo France தெரிவித்துள்ளது. இதனுடன் 48 மணி நேரத்திற்குள் வெப்பநிலை சுமார் 10°C வரை குறைந்து, மீண்டும் பருவகால சராசரி நிலைக்கு திரும்பும் என La Chaîne Météo குறிப்பிட்டுள்ளது.

பகிர்: WhatsApp Facebook X Telegram